dinsdag 1 november 2011

தஞ்சகோரிக்கையை நிராகரித்த வலி சுமந்த நாள்??

இன்றுதான் ஒல்லாந்து முதன் முதலில் எனது தஞ்சகோரிக்கையை நிராகரித்த 11வது நிறைவான வலி சுமந்த நாள்.ஆமாம் ?- 9-2000அன்று கேட்கப்பட்ட அகதித் தஞ்சம் 1-11-200அன்று நிராகரிக்கப்பட்டது அதுவும் மூடிய முகாமில் நாட்கள் வரை சிறைவைக்கப்பட்டு மூளை சலவை செய்யப்பட்டு முன்னுக்குப்பின் முரணான கேள்விகளால் சீரழித்து வந்த பாதையில் தடுமாற வைத்து ஏற்பதற்கு எதுவுமில்லை என்றும் பாதுகாப்பை களங்கப்படுத்தியதால் விரும்பத்தகாதவன் என்றும்  கூறி என்னை நடுவீதிக்கு கொண்டுவந்த .நாள்.மனிதாபிமானமேல்லாம் வெறும் வாய்பேச்சு என்று என்னை உணரவைத்த முதல் நாள்.அதன் பிறகு இன்றுவரை அலைகிறேன்.அவர்கள் முடிவு மட்டும் மாறவே இல்லை!!

மெழுகுதிரியாவது அடுத்தவருக்கு ஒளிகொடுத்து அணைகிறது நானோ??





நேற்று நான் ஐரோப்பா நுழைந்த 19வருட நிறைவுநாள்,ஐரோப்பாவில் மனிதம் கிடைக்கும்,எப்படியாவது வாழவைப்பார்கள் என்றெண்ணி ஏமாந்தவர்களில் நான் பழையவன்!!அகதிமுகாம் அவதிகளில் சிக்கி சீரழிந்து கண்ணீர் விட்ட நாட்களை இன்று நினைக்கையில் என்வாழ்வின் பெரும் பகுதியை இழந்து தனிமரமானது புரிகிறது,காரணம் யார்???மெழுகுதிரியாவது அடுத்தவருக்கு ஒளிகொடுத்து அணைகிறது நானோ??