அவள் முகத்தைப்பார்த்தேன்,அதில் எனக்கான உணர்வுகள் இல்லை,அவள் முகப்புத்தகத்தில் பார்த்தேன் எனக்கு இடமில்லை,அப்படியிருக்க என் இதயத்தை ரணமாக்கி இன்னொருவனை மணக்கப்போகும் அவள் மனதில் எப்படி ???கேட்டால் வயசுக்கோளாராம்!!இனக்கவர்வா
நானும் அதைத்தான் செய்கிறேன்,எனக்கென படைக்கபட்டவை என்னிடமே வந்து சேரும் ,இல்லையெனில் இறைவன்,அன்பு,சக்தி என்பன கற்பனையானவை!!
அவளின் முதல் முத்தம் தந்தவள் மறந்தது அவள் முதல் காதலைத்தான்!!!
கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன் என்ற காலத்தில்த்தான் இல்லானை எவருமே மதியார்,பொருள் இருப்பவன் முட்டாள் என்றாலும் மதிக்கப்படுவான் என்றும் சொல்லியுள்ளார்கள்!!
பாசம் தெரியாமல் வளர்ந்த பாசு சினி உன்னிடம் முள்ளைத்தவிர ரோஜா இதழ்களையா எதிர்பார்க்க முடியும்!!!
காதலும் காமமும் வேறு என்கின்றனர் காமத்தால் காதலில் வீழ்ந்தவர்!!பருவமடைந்தபிந்தான் காதல் வருகிறதென்றால் எது உண்மை?எதையும் எதிர்பாராமல் வருவதாம் காதல்,ஆனால் ஆணை பெண்ணும் பெண்ணை ஆணுமே காதலிக்கின்றனர்!!
கல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின்
எல்லாரும் சென்றங் கெதிர்கொள்வர்- இல்லானைஇல்லாளும் வேண்டாள்;மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லா(து) அவன்வாயிற் சொல்.இது ஔவை சொன்ன பொன்மொழி!இன்று ரோஜா வனத்தில் நானும் உணர்ந்தேன்!!
ரோஜா என்றாலே முள்ளு கொண்டதுதானே!ஆனால் என்னைக்காதலித்து துரோகித்தவள் உள்ளம் முள்ளு,தோற்றம் ரோஜா!!
நான் உன் பிரிவை தவிர்க்க போராடினேன்,உன் இதயத்தை கையில் ஏந்தினேன்,உன் கையில் என் இதயம் குரங்கு கைப்பூமாலையானதே!!
தனிமையில் மட்டுமா உன் நினைவு,அனைத்திலும் நீதானே ,உன் மனதில் அன்று நான் இருந்தபோது என்னையே சுற்றி வந்தாயே,நான் சொன்னபடி கேட்டாயே,எனக்காக அழுதாய்,என்று என்னைவிட உன் தலைப்பின்னல் உனக்கு உயர்வாச்சோ அன்றே உணர்ந்தேன்,உன் மனம் என்னை வெளியேற்றியதை,இருந்தும் உன் அன்பு இவ்வளவு கேவலமானது என்றுமட்டும் எண்ணவில்லை,காரணம் என் ரத்தத்தின் ரத்தம் உன்னிடம் கொஞ்சமாவது இருக்கும் என்பதால்!
அம்மாவுக்கு பிறகு அவளிடம் என்றுதான் எண்ணினேன்,அவளாக காதலித்தால்,அறியாமல் சம்மதித்தேன் இன்று கண்டும் காணாததுபோல செல்கின்றாள்,இதை பார்க்கவா இங்கிருந்தேன்!!!!அவளிடம் காதலை எதிர்பார்த்தேன்,இரக்கமே இல்லாதிருக்கின்றால்,இவளா எங்கள் ரத்தம்!!!!
அவள் முகத்தைப்பார்த்தேன்,அதில் எனக்கான உணர்வுகள் இல்லை,அவள் முகப்புத்தகத்தில் பார்த்தேன் எனக்கு இடமில்லை,அப்படியிருக்க என் இதயத்தை ரணமாக்கி இன்னொருவனை மணக்கப்போகும் அவள் மனதில் எப்படி ???கேட்டால் வயசுக்கோளாராம்!!இனக்கவர்வாம்!!அதற்குப்பெயர்தானடீ காதல்!
அவளின் முதல் முத்தம் தந்தவள் மறந்தது அவள் முதல் காதலைத்தான்!!!
ஜாரோ என் காதலி என்கிறாயா?அவளே என் காதலி மட்டுமல்ல மனைவியும் கூட!!அவள் ஜாரோ???
உன் மௌனம்தான் என்னை கொல்லும் வில்லன்,உன் ஆத்திரப்பேச்சுக்கூட என்னை தாலாட்டும் தென்றல்தான்,உன்னால் என்மீது கோபப்பட முடிகிறதே ஆச்சரியம்தான்!!
நீ பேசவில்லை என்பதால் நான் வருந்தவில்லை,மகிழ்ச்சிதான் ஏனெனில் நீ என்னை மறக்கவில்லை என்பதை உணர்த்தியதே உன் மௌனம்தான் பாசு !!!!!
தாலி தமிழச்சிக்கு கட்டவும் கழற்றவும் வெறும் கயிறா??
காதல் ஒருமுறைதான் வருமா??,கல்யாணம் புனிதமானதா !!!தமிழன் உண்மை சொல்வதே இல்லையா??
நினைவில் நிற்கும் அவளை வெறுப்பதா??எப்படி!!
ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே!!
என் காதல் வெளியிலும் சொல்ல முடியாதது,உள்ளத்திலும் உறங்காதது!!அவள் காதலை நான் காதலித்தது அன்று,அவள் மறந்தபின்னும் அவளுக்காக ஏங்குவதும் அவளை கண்டால் மறுபக்கம் பார்ப்பதும் இன்று!!இது இணையக்கூடிய உறவுமில்ல,தாங்கக்கூடிய பிரிவுமல்ல! காதலியாதீர் இளைஞரே,அது உங்கள் வாழ்வில் விஷமாகி உள்ளிருந்தே கொல்லும்!!அன்பு செலுத்தும் அனைத்து உயிரிலும்,கல்வியும் செல்வமுமே உம்மை காப்பாற்றும்!!
உன் மெளனம் என்னை கொல்கின்றதே!!!இறந்தவன் மீண்டும் இறக்கின்றேனே அது ரோஜா உன் இதழின் மெளனம் செய்த மாயம்தானோ?
சென்ற ஞாயிறு நீயா நானா வில் கலாய்த்தல் பற்றிய ஆராய்வின் போது நம் நினைவுக்கு உணர்த்தப்பட்ட நம் வரலாற்றுப்பாதை!!
அவள் எனக்கு கற்றுக்கொடுத்ததும் இதைத்தான்!!அவளால் என் உறவுகள் கூட எனக்கு பகை!!ஏன் சொல்லை கேட்ட மதித்த உறவுகளுக்கும் நட்புகளுக்கும் இன்று நான் கேலி!அவள் செய்த தவறுகளுக்கு நான் பலி!அந்நியர் அவளுக்கு மாமா,பொய்களுக்கு அவள்தான் தாய்!காதலிக்க முன் குடும்பத்தை பார்!குடும்பத்தில் தவறு கண்டால் வேறு பெண்ணை பார்!!
என்னை காதலித்தவள் காரணமே இல்லாமல் எரிந்து விழுவதும் என்னை வெறுத்ததும் என்னைத்தவிர எல்லோருடனும் சிரித்துபேசி தழுவி மகிழ்வதும் பெற்றோருக்காக சத்தியத்தை கொன்றதும் பொய்யாக வாழ்வதும் எனது வைத்தி என்று வைத்தாலும் தவறு செய்தவர் தவறாக வாழ்பவர் தவறுக்கு தூண்டியவரை பாதிக்கப்பட்டவர் பழிவாங்குவதுதானே நியாயம்!!ஆனால் சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்தவள் என்னை துரோகியாக பார்ப்பதும் எதிரியாக சண்டை போடுவதும் எந்த வகையில் நியாயம்,ஆணுக்கும் கற்பு உண்டல்லவா???ஆளை மாறுவதால் அவளுக்கு சந்தோசம்,அதை நான் அறியாதிருந்தால் எனக்கு சந்தோசம்!!மாமன் வாழ்வைத்தான் அழித்தாய்,உயிரையும் விடவைக்கப்போகிறாயா??ரோஜா உன்னிடம் முள் இருப்பது மட்டுமே உண்மை!!
நம்மில் பலர் என்பது தவறு!!எல்லோருமே!!இன்று பொய் என்பது நாகரிக வார்த்தையாகி மெய் என்பது முட்டாத்தனம் என்றாகி விட்டது!!
நம்மவர் தமிழ்,தமிழ் கலாச்சாரம்,பண்பாடு என்றெல்லாம் மேடைகளில் முழங்குகிறார்கள்,ஆனால் உண்மையில் தூரத்து சித்தப்பா,தூரத்து அண்ணன் என பெண்களுக்கு மாப்பிள்ளைகளை கட்டிவைக்கிரார்கள்!!மாமன் அல்லது மாமனின் மகன் என்பது போல,மச்சாள் அல்லது அவளின் மகளை கட்டலாம் என்பது தமிழர் முன்னைய விதி என்கிறார்கள் பழமை அறிந்தோர்!!பணக்காரரானால் தூரத்து பெரியப்பா,சித்தப்பா,அண்ணன்போன்றோருக்கு பெண் கொடுக்கலாம் என்கிறது இன்றைய
தலைமுறை!!பெண்களோ பண்பாடு காக்கும் செயற்பாடுகளை எல்லாம் காமத்தின் முன்னால் கழட்டிவிட்டு ஒன்றுவிட்ட சகோதரர்களை,சித்தப்பாக்களை காதலிப்பதும் கள்ளத்தொடர்பு கொள்வதும் இன்று இலங்கை,இந்திய,அந்நிய நாடுகளில் அட்டகாசமான முறையில் அரங்கேறுகின்றது!!எது உண்மையில்
தமிழர் மரபு??தமிழர் மரபை கடைப்பிடிக்க தவறுவோர் எப்படி தமிழர்???தெரிந்தவர் சொல்லுங்கள்,தெரியாதவர் கேட்டு உணரவே!!
ரோஜா என்று அவள் தழுவிய போது கண்ணை மூட முள்ளாக குத்தி என் முடிவை இப்படித்தான் எதிர்பார்த்தாளோ!!நானும் இந்த முடிவைத்தான் நாடி இருப்பேன் என் வாழ்வே சோதனையுடன் கூடிய வேதனையாக இல்லாதிருந்தால்!!இந்த முடிவு செய்திருந்தால் இன்றைய சோதனையில் இருந்து சுபமாக தப்பித்திருப்பேன்!!என்னை மன்னித்துக்கொள் !!உன்னை ஏமாற்றிவிட்டேன்!!உன் நினைவே என்னை சாகாமல் தடுத்ததடி சாந்தகுமாரியே!!எங்கிருந்தாலும் வாழ்க என் காதல் மனைவியே!!
2003-2004 ஒரு துயர சம்பவத்தின் பின் இன்றைய மாறாத்துயரும் சூழ காரணமான அவள் முத்தம் ஒருநாள் எனது தவிர்ப்பின் பின் சனி காலை காலை சனி பற்றியது!!அன்றிலிருந்து இன்றுவரை புத்தி அவளை பிரி என்றாலும் இதயம் அவளுக்காக பேசியது,ஏங்கியது,வாடியது.இடையில் பல சோதனைகள்,நாடு கடத்தும் உத்தரவுகள்,நாடு மாறல்கள் நடாந்தும் அவள் நினைவு மட்டும் நிலையை என் மனதில்!எனக்காக ஏங்கிய அவள் எனக்கு செய்த சத்தியங்கள் பலப்பல!!நான் அவளை
தவிர்க்க அவளை மறக்க கடவுளைக்கூட பிரார்த்தித்தேன்!உயிராய் உறவாடி,எனக்காக வாடிய அவள் 2005 இல் என்னை மறுத்தாள்,வெறுத்தாள்! நான் தாலி கட்டியதும் அப்போதுதான்,முருகன் சாட்சி பார்க்க கட்டிய தாலி அவளால் கழட்டி எறியப்பட்டது 2007இல்!!முருகன் அவளுக்கு இன்று சாட்சி!அதன் பின்னால் எனக்கு பல பெண்கள் அறிமுகம்
கிடைத்தும் அவள் நினைவு என்னை அதிலிருந்து தடுத்தது,என்னை மறந்த அவள் நினைவில் எத்தனையோ புதுக்காதல்கள்!!அனைத்தும் என் கண் முன்னால் நடாந்தும் மனத்தில் இன்னும் அவள் நினைவு என் திருமண விருப்பை தடுக்கின்றது.அவளோ மணம் செய்ய தகுதியான ஆணை தேடுகிறாள்.அதற்கு எனது உதவியும் வேண்டுகிறாள்!மனைவிக்கு கணவன் தேடும் பாக்கியசாலி நான்!!உறவை மதிக்க,சத்தியத்தை காப்பாற்ற முடியாத காதல்,கல்யாணம் ,இதுதான் பெண்களின் உண்மை மனம்!!ஆண்களே ஒரு கணம் சிந்தித்துப்பார்த்தீர்களான
அவள் காதலித்ததால் அன்று காதல் என்னை ஆட்கொண்டது,அவள் மறந்த பின்னும் அது என்னிடம் நின்றுவிட்டது!இல் இருந்து இன்றுவரை அவள் என்நினைவில்,அவள் நினைவில் பல மாற்றம்,நான் இன்று பிச்சைக்காரனாக இருக்க நாய் விட்டு என்னை துரத்தி அடிக்கிறாள் என் அன்றைய மனைவி,காதலி!!உண்மையில் அவள் என் நிலைகண்டு கண்ணீர விட்டிருப்பாள் உண்மையில் என்னை காதலித்திருந்தால்!!!சூழ்நிலைதான் பிரித்தது என்பதற்கு எந்த சான்றும் இல்லை!!மேலும் நான் துன்பமடையவேன்று அவள் செயலாற்றும் விதமிருக்கே ஆண்களால் முடியாதப்ப!!என்னை வெறுப்பேற்றுவதால் அவள் அடையப்போவது சுபம் என்றால் அவளுக்காக அதை நான் அடைவேன்!!
அவள் முன் இந்த உலக அழகி கூட செல்லாத காசுதான்,அவளை மறக்க அவளிடம் நான் சண்டை செய்கிறேன்,என் நினைவை அவள் துறக்க அவளை நான் கேவலமாக பேசுகிறேன்!!காரணம் அவள் எனது சுவாசம்,அவள் வாழ்ந்தாலே நான் வாழ்ந்துதான்,அவளை பேசியபின் நான் படும் துயரம் அவள் ஒரு புன்னகையில் மறைகிறதே ,அதுதான் என் காதலின் உண்மை!!
Geen opmerkingen:
Een reactie posten